x esoft

0431 4200427

Directory


    நாவல்பழ லஸ்ஸி

    தேவையானப் பொருட்கள்:

    நாவல்பழம் &
    ஒரு கப், ஏதாவது ஒரு ஸ்வீட்னர் &
    அரை கப், தயிர் &
    அரை கப்.


    செய்முறை:

    அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அதில் நாவல்பழங்களைப் போட்டு,ஒரு தட்டினால் மூடி, அடுப்பை அணைத்து விடவும். இதை மிக்ஸியில் போட்டு, ஸ்வீட்னர், தயிர் சேர்த்து அரைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’லென்றுபருகவும்.குறிப்பு: கொழுப்பு குறைந்த பாலில் தயாரிக்கும் தயிரில்தான் இந்த லஸ்ஸியை செய்ய வேண்டும்.சர்க்கரை குறைபாடு இல்லாதவர்கள்,ஸ்வீட்னர் சேர்ப்பதற்கு பதில் சர்க்கரை அரை கப் சேர்த்து தயாரிக்கலாம்.
    பலாப்பழ ஜுஸ்

    தேவையானப் பொருட்கள்:

    பலாப்பழம் &
    20 சுளைகள் பால் &
    2 கப் தண்ணீர் &
    1 கப் சீனி &
    12 தேக்கரண்டி வனிலா &
    அரை தேக்கரண்டி மஞ்சள்கலரிங்(ஜசிங்கலர்)& அரைகால்தேக்கரண்டி

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றவும். அதே ரின்னில் இரு முறை தண்ணீர் எடுத்து ஊற்றி சீனியும் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். 2 தரம் பொங்கியவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும். 1/4 கப் சுடுநீரில் ஜெலற்றீனைக் கரைத்து ஆறிய பாலில் விடவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃபீரிசரில் 6-7 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை வெளியே எடுத்து 2 மடங்கு பொங்கிவரும் வரை அடிக்கவும். மீண்டும் ஃபீரிசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.

    தேவையானப் பொருட்கள்:

    பழுத்த பப்பாளி பழம் - 1
    பால் - 1 கப்
    பால் - 1 கப்
    தேன் - 1 தே.க


    செய்முறை:

    எல்லவற்றயும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.    மேலே கூல் வீப் க்ரிம் போட்டு சர்வ் செய்யலாம்.    வெனிலா ஐஸ் க்ரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ் கிரிம் போட்டு சர்வ் செய்யலாம். குறிப்பு: இது உடம்பிற்க்கும் நல்லது இதில் நியுட்ரியஸ் உள்ளது.
    வாத்துகறி குழம்பு

    தேவையானப் பொருட்கள்:

    வாத்துகறி - 1 கிலோ, நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2, நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2, கீறிய பச்சை மிளகாய் - 10, மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன், முழுப்பூண்டு - 2, பிரியாணி இலை - 4, புளிக்கரைசல் - 2 கப், மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/4 கப், வடகம் - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீ ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும். புளிக்கரைசலில் உரித்த முழுப்பூண்டு பற்கள், மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். ஃபகடாயில் எண்ணெய் விட்டு வடகத்தைப் பொரித்து தனியாக வைத்து, அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும். வடகம்-தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். வதங்கியதும் புளிக்கரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும். கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
    சிக்கன் மக்ரோனி

    தேவையானப் பொருட்கள்:

    மக்ரோனி - 150 கிராம், எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ, வெங்காயம் - 2, தக்காளி - 1, கறிவேப்பிலை - 1 கொத்து, பச்சைமிளகாய் - 2, இஞ்சி, பூண்டு விழுது - 3 டீ ஸ்பூன், தயிர் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீ ஸ்பூன், பட்டை, ஏலக்காய், கிராம்பு(வாசனைத்தூள்) - 1/2 டீ ஸ்பூன், சிக்கன் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன், தனியா தூள் - 1/2 டீ ஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், நெய் - 4 டீ ஸ்பூன்

    செய்முறை:

    மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்­ணீர் வடித்துக்கொள்ளவும். வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி சேர்க்கவும். பின்னர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும். அதில் தக்காளி, பின்னர் எல்லாத்தூள்களையும் தயிர் சேர்த்து வதக்கவும். எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும்.
    தூத் மக்கன்வாலா

    தேவையானப் பொருட்கள்:

    பனீர் - 1\4 கிலோ, வெங்காயம் - 200 கிராம், தக்காளி - 200 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1\2 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், காய்ந்த வெந்தய இலை - 1\4 டீஸ்பூன், கருப்பு உப்பு - 1\4 டீஸ்பூன், தயிர் - 1 கப், வெண்ணெய் - 50 கிராம், பாலாடை - 4 டீஸ்பூன்


    செய்முறை:

    பனீரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து, வெண்ணெயில் ஒவ்வொன்றாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும். மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும். வெந்தய இலை, தயிர் சேர்க்கவும். ஓரளவு கொதித்ததும் பனீர் துண்டுகள் சேர்க்கவும். விருப்பப்பட்டால் சிகப்பு கலர் சேர்க்கலாம். நன்றாகக் கொதித்ததும், பாலாடை சேர்த்து, பச்சை வெங்காயம், தக்காளி மற்றும் எலுமிச்சை பழ வில்லைகளுடன் பரிமாறவும்.
    மாங்காய் சூப்

    தேவையானப் பொருட்கள்:

    பச்சை மாங்காய் (முற்றியது) - 5, சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், கிரீம் - 1 கப், வெள்ளை மிளகுத்தூள் - 1 சிட்டிகை, புதினா இலை - 10 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு, சீவிய ஐஸ் - 2 கப்


    செய்முறை:

    பச்சை மாங்காயை தணலில் சுட்டெடுக்கவும். ஆற வைத்து தோல் நீக்கி, சதைப் பகுதியை தனியே எடுக்கவும். ஒரு ஜாடியில் மாங்காய், சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், கிரீம், புதினா இலைகளைப் போட்டு கலக்கவும். மிருதுவாகும் வரை வேகமாக கலக்கவும். பிறகு சீவிய ஐஸை கலந்து சில்லென்று பரிமாறவும். விரும்பினால் வறுத்துப் பொடித்த சோம்பைத் தூவலாம். இதே முறையில் வெள்ளரி, பூசணி, சுரைக்காயிலும் செய்யலாம். (குறிப்பு: புளிப்பு மாங்காய்க்கு பதில் இனிப்பு மாங்காயும், சர்க்கரைக்கு பதில் வெல்லமும் சேர்த்தால் சுவை கூடும்.)
    பாசிப்பருப்பு கீரை புட்டு

    தேவையானப் பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 400 கிராம், முருங்கைக்கீரை - 1 கப், சிறிதாக நறுக்கிய வல்லாரை கீரை - 1 கப், பெரிய வெங்காயத் துருவல் - 1 கப், இஞ்சி விழுது - சிறிது, பச்சை மிளகாய் - 1/4 கப், கொத்தமல்லிததழை - 1/4 கப், கேரட் துருவல் - 1/2 கப், கடுகு - 1/2 டீஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    பாசிப்பருப்பை ஊறவைத்து சற்று உலர்ந்தவுடன் மிக்ஸியில் மூன்று நிமிடம் கொடுத்து தூளாக்கி தனியே வைத்துக் கொள்ளவும். முருங்கைக் கீரை, வல்லாரைக் கீரை ஆகியவற்றை சிறிது உப்பு சேர்த்து தனித்தனியே வேக வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு நன்கு பொரிந்ததும், இஞ்சி விழுதைச் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயத்தையும் சேர்த்துப் பொன்னிறமாக வறுபட்டதும் பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை ஆகியவற்றைப் போட்டுக் கிளறி இறக்கிற விட வேண்டும். இக்கலவை, வேகவைத்துள்ள முருங்கைக்கீரை, வல்லாரைக் கீரை ஆகியவற்றை பாசிப்பருப்புத் தூளுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். ருசிக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்போது மிக்ஸ்டு புட்டு மாவு ரெடி.
    கோதுமை ரவை குக்கா

    தேவையானப் பொருட்கள்:

    சம்பா கோதுமை ரவை - 1 டம்ளர், பச்சைப் பட்டாணி - 1 கப், பெரிய வெங்காயம் - 2, பெரிய பூண்டுப் பற்கள் - 5, பச்சை மிளகாய் - 6, முந்திரி - 5, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பட்டை - 2, ஏலக்காய் - 2, லவங்கம் - 2, புதினா இலை - 1 பிடி, பிரிஞ்சி இலை - 2, தேங்காய் பால் - 2 டம்ளர், தண்ணீர் - 2 டம்ளர், நெய் - சிறிது, ஆயில் - சிறிது, உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    ரவையை நெய்விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும், பிறகு குக்கரில் கொஞ்சம் ஆயில் ஊற்றி பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டுத் தாளிக்கவும். பிறகு முந்திரி, புதினா இலை, இஞ்சி பூண்டு விழுது, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி இவைகளைப் போட்டு நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் ரவை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடிவிடவும். 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். (மிதமான தீயில் இதை செய்யவும்) சிறிது நேரம் கழித்து சிறிதளவு நெய் விட்டு கிளறி உருளைக்கிழங்கு குருமாவுடன் இதை பரிமாறவும்.
    ஹெர்பல் சூப்

    தேவையானப் பொருட்கள்:

    துளசி - ஒரு கைப்பிடி, புதினா - ஒரு கைப்பிடி, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, வெற்றிலை - 2, கறிவேப்பிலை - 10, இலைகள்கற்பூரவல்லி - 2 இலை, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 2 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, நெய் - 2 டீஸ்பூன்.


    செய்முறை:

    எல்லா இலைகளையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பிறகு, இலைகளை சேர்க்க வேண்டும். இவற்றையும் சற்று நன்கு வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நடுத்தரத் தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு, இலைகளை தனியே எடுத்து அரைத்து மீண்டும் வேகவைத்த தண்ணீரில் சேர்த்து கலந்து வடிகட்டுங்கள். நன்கு சூடாக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து பரிமாறுங்கள்.
    வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ்

    தேவையானப் பொருட்கள்:

    பதுருவிய கேரட் - அரை கப், நறுக்கிய கோஸ் - அரை கப், பொடியாக நறுக்கிய குடமிளாகாய், பீன்ஸ் - தலா கால் கப், நறுக்கிய வெங்காயம் - 2, சோள மாவு - அரை கப், மைதா மாவு - அரை கப், அஜினமோட்டோ - அரை டீஸ்பூன், வெங்காயத்தாள் - அலங்கரிக்க, பூண்டு - 3 பல், பச்சைமிளகாய் - 3, எண்ணெய் - பொரிக்க, உப்பு - தேவையான அளவு.


    செய்முறை:

    பூண்டு, பச்சை மிளகாயை நசுக்கிக் கொள்ளுங்கள். இதனுடன், நறுக்கிய காய்கறிகள், அஜினமோட்டோ, சோயா சாஸ், சோள மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுங்கள். வெங்காயத்தாளால் அலங்கரித்து பரிமாறுங்கள்.
    மீன் கட்லெட்

    தேவையானப் பொருட்கள்:

    நல்ல சதைப்பற்றுள்ள மீன் - 1/2 கிலோ, ரொட்டித்தூள் - ஒரு கப், உப்பு - ருசிக்கேற்ப, நெய் - 4 டீஸ்பூன், வறுத்து பொடி செய்த சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 10 பல், நசுக்கிய இஞ்சி - 2 துண்டு, நறுக்கிய வெங்காயம் - 4, அடித்த முட்டை - 2


    செய்முறை:

    மீனை வேக வைத்து முள்ளை நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும். வெங்காயம், ரொட்டித்தூள், இஞ்சி, பூண்டு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு, முட்டை எல்லாவற்றையும் மீன் விழுதோடு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். விழுதை ஒரே அளவுள்ள சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக்கிக் கொள்ளவும் தவாவில் நெய்யை சூடாக்கி மீன் கட்லட்டுகளைப் போட்டு, இருபுறமும் சிவக்க விட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.