ஆரோக்கிய வாழ்வு
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.
குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சில நல்ல ஹெல்தியான உணவு வகைகளை கொடுத்து பழகி விட்டால் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள்.குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு கேரட்டை துருவி அதில் சிறிது பால்,ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மிக்சியில் ஓடவிட்டு வடிகட்டி அதில் தேன் கலந்து கொடுக்கவும்.இதை குடிப்பதால், கண்கள் தெளிவு பெறுகிறது, உங்கள் குழந்தைகளின் கலரும் சூப்ப்ர், தேன் சேருவதால் பேச்சிலும் தெளிவு வரும். தினமும் கொடுங்கள், இல்லை வாரத்துக்கு முன்று முறையாவது கொடுங்கள்.
தண்ணீர் குடிப்பது அத்தியாவசியம்
தாகம் எடுத்தால் தான் பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்கின்றனர். பெண்கள் வெளியிடங்களுக்கு செல்வது என்றால் தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் உடலுக்கு கேட்டினை ஏற்படுத்தும். அடிக்கடி தண்ணீர் அருந்துவதுதான் உடலுக்கு நல்லது.ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைவலி ஏற்படுவதோடு நமது கவனமும் சிதறும்.உடற்பயிற்சி செய்யும்போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
கர்ப்பம் அடையாமல் போகும்போது...
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு ஒழுங்கான சுழற்சியில் மாதவிடாய் இல்லாமலிருப்பதே காரணமாகும். பொதுவாக இந்தச் சுழற்சி நீண்ட நாள்களோ, குறைவான நாள்களோ, அதாவது 24 நாள்களுக்குக் குறைவாக, 35 நாள்களுக்குக் கூடுதலாக இருப்பின் அல்லது எதிர்பாராமல் மாதவிடாய் ஏற்பட்டால் நீங்கள் அவசியம் மருத்துவரை அணுகவேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய் கருவுறுதலில் சில சிக்கல்கள் ஏற்படுத்திவிடும்.
அரைக்கீரை
இக்கீரை சற்று தித்திப்புச் சுவையுடையது. உஷ்ண சக்தி கொண்டது. அரைக்கீரையுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் உஷ்ணத்தை உண்டாக்காது. மருந்துகள் உண்ணும் காலத்தில் இக்கீரை பத்தியமாகப் பயன்படுகிறது.
அரைக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜீரம், குளிர் ஜீரம், வாத ஜீரம், ஜன்னி, பாத ஜீரம், போன்றவை குணமாகும்.அரைக்கீரை தேகத்தில் அழகை அதிகரித்து பொலிவுறச் செய்யும்.