x esoft

0431 4200427

Directory




பொடுகில்லாத கூந்தலைப் பெற
தேவையான பொருட்கள்
வேப்பிலை - 2 கைப்பிடி
நல்ல மிளகு - 15-20
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.

முகப்பருவிலிருந்து விடுதலை பெற......
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு மாவு
வேப்பிலை
உணவில் கீரை மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். முகத்தில் தோன்றும் பருக்களை ஒரு போதும் கிள்ளாதீர்கள். சோப்புக்குப் பதிலாகப் பச்சைப் பயிறு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம். குளிக்கும் நீரில் வேப்பிலைகளைப் போட்டுக் குளித்தாலும் கிருமிகளைத் தவிர்க்கலாம். எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்களுக்கே முகப்பரு வரும். அடிக்கடி குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்துக்கொள்வது நல்லது.

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு...
தேவையான பொருட்கள்
விளக்கெண்ணெய்

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும். கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம். கண்கள் குளிர்ச்சியாவதுடன், புருவங்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவும்.

வெயில் கால சரும பாதுகாப்பிற்கு...
தேவையான பொருட்கள்
தயிர்,
வாழைப்பழம் அல்லது கொத்தமல்லி இலை
இதில் எதை பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதை மசித்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் வெள்ளரிக்காயும் தேவை. . முகம் கழுவி சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். மசியலை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். முகம் முழுவதும் பூசியபிறகு, நீங்களாகவே உங்கள் கைகளைக் கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள்.பின்பு குளிர்ந்த நீரில் நன்றாக முகத்தை கழுவி துடைத்தால் உங்கள் முகம் பளபளக்கும்.